பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு பதில், மகளின் இறுதிச்சடங்கை நடத்தவேண்டிய சூழலுக்கு ஆளான தாய்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் தன் பிறந்தநாளைக் கொண்டாடவேண்டிய அன்று, தன் மகளுடைய இறுதிச்சடங்கை நடத்தவேண்டிய நிலைமை ஒரு தாய்க்கு ஏற்பட்டுள்ளது.

Ella Henderson (6) என்ற சிறுமி பள்ளியிலிருக்கும்போது அவர்மீது ஒரு மரம் விழுந்துள்ளது. பலத்த காயமடைந்த Ella உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி மறுநாள் இறந்துபோனாள்.

ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. தனது 40ஆவது பிறந்தநாளை மகளுடன் கொண்டாடியிருக்கவேண்டிய நிலையில், Ellaவின் இறுதிச்சடங்கை நடத்தவேண்டிய சூழல் ஏற்பட, Ellaவின் தாய் Vikki Henderson, தனது மகள் நினைவாக, அவளைக் காப்பாற்ற முயன்ற ஏர் ஆம்புலன்ஸ் தொண்டு நிறுவனத்துக்கு உதவுவதற்காக நிதி வழங்கும்படி கோர, மக்கள் வாரி வழங்கினார்கள்.

2,700 பேர் தாராளமாக வாரி வழங்க, 40,000 பவுண்டுகளுக்கு அதிகமாக நிதி சேர்ந்துவிட்டது. இதற்கிடையில் விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்