ஏற்கனவே வாழ்வதற்கு போராடிக்கொண்டிருக்கிறோம்... நீங்கள் அதை மேலும் கடினமாக்கிவிட்டீர்கள்: பிரித்தானிய பிரதமருக்கு ஒரு கடிதம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஏற்கனவே வாழ்வதற்கு போராடிக்கொண்டிருக்கிறோம்... உங்கள் விதிமுறைகள் அதை மேலும் கடினமாக்கிவிட்டன என்று பிரித்தானிய மதுபான விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடிதம் எழுதியுள்ளார்கள்.

பிரித்தானியாவிலுள்ள நூற்றுக்கும் மேலான மதுபான விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மூன்று வாரத்திற்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பே, விருந்தோம்பல் துறை அடுத்த ஆண்டு பாதி வரையாவது சமாளிக்க முடியுமா என திணறிக்கொண்டிருந்தது என்று கூறியுள்ள அவர்கள், இப்போது கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதையடுத்து மூன்று வாரத்திற்கு ஒருமுறை அவற்றை மறுபரிசீலனை செய்து, அவை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் திறன்வாய்ந்தவை அல்ல என்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவற்றை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதை ஒரு அவசர பிரச்சினையாக கருதி தலையிடுமாறு பிரதமரை அவர்கள் கோரியுள்ளார்கள்.

பெரும்பாலான நோய்த்தொற்று பள்ளிகள் மற்றும் அலுவலகங்களிலிருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் ஏன் மதுபான விடுதிகளையும் உணவகங்களையும் குறிவைக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்