கைரேகை ஆய்வுக்காக குற்றவாளிகளின் கைகளையே வெட்டிய ஜேர்மன் பொலிசார்: வெளிவரும் பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

குற்றவாளிகளின் கைரேகை ஆய்வை முன்னெடுக்க ஜேர்மன் பொலிசார் அவர்களின் கைகளையே வெட்டி பிரித்தானியாவுக்கு அனுப்பியதாக காவல்துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையில் இச்சம்பவங்கள் அனைத்தும் கைரேகை ஆய்வு தொடர்பான தொடக்க காலகட்டத்தில் நடந்தேறியது என்பதை அந்த அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த கைகள் அனைத்தும் தற்போதும் பொலிசாருக்கான குற்றவியல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தடய அறிவியல் ஒழுங்குமுறை மற்றும் பயோமெட்ரிக்ஸ் வியூக மசோதா தொடர்பான உறுப்பினர்களின் காரசார விவாதம் நடைபெறும் சூழலில் பொலிஸ் துறை அமைச்சர் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தொடக்க காலகட்டத்தில் பிரித்தானியாவில் குற்றச்செயல்களை புரிந்துவிட்டு ஜேர்மனியில் தலைமறைவாகும் குற்றவாளிகள் அங்குள்ள பொலிசாரிடம் சிக்குவதுண்டு.

அவர்களின் கைரேகைகளை ஆய்வுக்கு உட்படுத்த ஜேர்மன் பொலிசாரிடம் பிரித்தானிய பொலிஸ் தரப்பு கோரிக்கை வைத்தால்,

குற்றவாளிகளின் கைகளை வெட்டி ஜேர்மன் பொலிசார் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைப்பது வாடிக்கையாக இருந்து வந்தது என்றார்.

இச்சம்பவங்கள் அனைத்தும் 1950 காலகட்டத்தில் பொலிஸ் துறையில் நடந்தேறியவை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்