கொரோனா ஊரடங்கு கவனப்பட்டியலில் லண்டனும் சேர்ந்தது: கொரோனா தொற்று அதிகரித்ததையடுத்து நடவடிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கடைசியாக லண்டனும் கொரோனா ஊரடங்கு கவனப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த இங்கிலாந்து பொது சுகாதாரத்துறையின் விவரமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று இரவு முதல் லீட்ஸ் பகுதியிலும் புதிய கொரோனா கட்டுப்படுகள் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தின் கொரோனா அதிகரித்துள்ள பல பகுதிகள் ஏற்கனவே இந்த கொரோனா ஊரடங்கு கவனப்பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டன.

எந்த அளவுக்கு கொரோனா பரவுகிறது என்பதன் அடிப்படையில் இந்த பகுதிகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன, ’கவனம் செலுத்தவேண்டிய பகுதிகள்’, ’அதிக ஆதரவு தேவைப்படும் பகுதிகள்’ மற்றும் ’நடவடிக்கையில் இறங்கியே ஆகவேண்டிய பகுதிகள்’ என அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ’நடவடிக்கையில் இறங்கியே ஆகவேண்டிய பகுதிகள்’ என்ற வகையின் கீழ் வரும் பகுதிகளில் உள்ளூர் மட்டத்திற்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும். இந்த பட்டியல் வெள்ளி தோறும் புதுப்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்