பிரித்தானியாவின் பிரபல நகரில் நள்ளிரவு முதல் புதிய கடுமையான கட்டுப்பாடுகள்: வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா

வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் பிரித்தானியாவின் லீட்ஸ் நகரில் நள்ளிரவில் முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடும் என்று அதன் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

லீட்ஸ் நகரம் பிரித்தானியா அரசாங்கம் ‘தலையீட்டு பகுதி’ ஆக மாறும் என்று தான் எதிர்பார்ப்பதாக லீட்ஸ் கவுன்சில் தலைவரான ஜூடித் பிளேக் கூறினார்.

முதல் நகரில் கொரோனா பரவுவதை நிறுத்தும் நோக்கில் நள்ளிரவு முதல் புதிய நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறினார்.

லீட்ஸ் நகரில் உள்ள மக்கள் மற்ற வீட்டாரை சந்திக்க தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 21 ஆம் தேதி வரையிலான வாரத்தில் லீட்ஸில் 829 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.

லீட்ஸ் நகரின் மக்கள்தொகை 7,93,000 என்பதால், பிரித்தானியா முழுவதும் உள்ளூர் கட்டுப்பாடுகளின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையை 16.2 மில்லியனுக்கும் அதிகமாகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்