மனைவியைக் கொலை செய்ததாக வெளிநாட்டவர் பிரித்தானியாவில் கைது

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது ஏழு குழந்தைகளின் தாயான தன் மனைவியை கொலை செய்ததாக சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லீட்ஸில் அமைந்துள்ள தனது வீட்டில் அபிதா கரிம் (39) என்ற அந்த பாகிஸ்தானிய பெண் நேற்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அபிதாவை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் அவரது கணவரான சாஜித் பெர்வேஸ் (37) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் மரணமடைந்த தனது தந்தையை அடக்கம் செய்துவிட்டு சென்ற வாரம்தான் அபிதா பிரித்தானியா திரும்பியது குறிப்பிடத்தக்கது.

கொலையின் நோக்கம் என்ன என்பது சரியாக தெரியாத நிலையில், குடும்பத் தகராற் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்