பிரித்தானியாவில் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றம்: வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா தனது கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்லோவாக்கியா மற்றும் குராக்கோ ஆகிய நாடுகளைச் சேர்த்துள்ளது.

இந்த நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் அனைவரும் இரண்டு வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்த வேண்டும். இந்த மாற்றம் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது.

ஐஸ்லாந்து மக்கள் தொகையை பொறுத்தவரையில் 1,00,000 பேருக்கு என்ற கணக்கீட்டின்படி, கடந்த வாரத்தில் புதிதாகப் பதிவான வழக்குகளில் 921 சதவீதம் அதிகரித்து இருப்பதைக் காட்டுகிறது என்று பிரித்தானியாவின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

ஸ்லோவாக்கியாவில், கடந்த 4 வாரங்களில் கொரோனாவின் வாராந்திர வழக்கு விகிதத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, 1,00,000 பேருக்கு என்ற கணக்கீட்டின்படி செப்டம்பர் 2 முதல் 23 வரை வழக்குகளில் 115 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த நான்கு வாரங்களில் டென்மார்க்கில் வாரத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்ட வழக்குகளில் 508 சதவீதம் அதிகரித்துள்ளது.

சமீபத்திய வாரங்களில், ஹங்கேரி, போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியாவும் பிரித்தானியா தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

விலக்கு இல்லாத நாடுகளிலிருந்து பிரித்தானியா வருபவர்கள் கட்டாயம் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும், இல்லையெனில், 1000 பவுண்ட் முதல் அபராதம் விதிக்கப்படும் என பிரித்தானியா போக்குவரத்துத் துறை செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் எச்சரித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்