ஒருவரின் லேசான இருமல் மற்றொருவரின் மரணக் குமிழியாக மாறலாம்! புதிய கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் போரிஸ் ஜோன்சன்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் குளிர்காலத்தில் இந்த கொரோனாவை எதிர்த்து போராடுவது குறித்து மக்களுக்கு அழைத்துவிடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 4,926 பேர் புதிதாக் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் இந்த கொரோனா விஷயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அக்டோபர் நடுப்பகுதியில் நாட்டில் நாள் ஒன்றிற்கு 50,000 புதிய வழக்குகளையும் 200 இறப்புகளையும் எதிர்கொள்ளக்கூடும் என்று அரசாங்கத்தின் உயர் அதிகாரி எச்சரித்திருந்தார்.

இதையடுத்து நாட்டில் திருமணங்களில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 15 ஆக குறைத்து, முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு அபராதத்தை இரட்டிப்பாக்கி, உட்புற விளையாட்டுக்கு போரிஸ் ஜோன்சன் தடை விதித்தார்.

சமீபத்தில் விதிக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் என்று அவர் எச்சரித்தார்.

மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் படியும், சில வாரங்களுக்குப் பிறகு அலுவலகத்திற்குத் திரும்புவது பாதுகாப்பானது என்று ஜோன்சன் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி பப்புகள் போன்றவைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சற்று முன்னர் பிரதமர் அலுவலகம் போரிஸ் ஜோன்சன் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மக்கள் முன் பேசும் ஜோன்சன், குளிர்காலத்தில் இந்த கொரோனாவை எதிர்த்து போராடுவது குறித்தும், செவ்வாய் கிழமை அன்று அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் விதிகளைப் பின்பற்றுவதற்கான ஒழுக்கத்தையும், தீர்மானம் குறித்தும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், புதிய நடவடிக்கைகளை ஆதாரித்த போரிஸ், சிலர் எங்களுக்கு இது போன்ற நடவடிக்கைகள் தேவையில்லை என்று நினைக்கலாம்.

ஆனால் இந்த நோய் எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பதன் காரணமாகவும், அது ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவி விடுவதால் இப்படி ஒரு நடவடிக்கை.

ஒரு புதிய தேசிய ஊரடங்கிற்கு தள்ளப்பட்டால், அது வேலைகள் மற்றும் வாழ்வாதாரங்களை மட்டுமல்ல, நாம் அனைவரும் சார்ந்திருக்கும் நபர்களையும் பாதிக்கும், நாங்கள் இப்போது செயல்படாவிட்டால் இன்னும் பல மரணங்கள் ஏற்படலாம்.

கொரோனா இருப்பதன் துன்பகரமான உண்மை என்னவென்றால், உங்களின் லேசான இருமல் வேறொருவரின் மரணக் குமிழியாக மாறிவிடலாம்.

வெறு சாதரணமாக நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது நன்றாக இருக்காது. கடுமையான விதிமுறைகள் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியும், இல்லையெனில், குறித்த வைரஸ் வயதானவர்களை அதிகம் தாக்குவதற்கு வழி வகுத்துவிடும்.

இப்போது நாங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பின்னர் கடுமையான நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டியிருக்கும்.

நாங்கள் வகுத்துள்ள விதிகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால், மேலும் கடுமையாக்கும் நிலை ஏற்படலாம். கொரோனாவிற்கு எதிரான போரட்டத்தில் மக்களின் மிகப் பெரிய ஆயுதம் என்னவென்றால், அவர்களின் அறிவு.

thesun.co.uk

எனவே, இந்த எளிய விதிகளை நாங்கள் ஒன்றாகப் பின்பற்றினால், இந்த குளிர்காலத்தில் நாம் ஒன்றாக வெல்லாம். நிச்சயமாக வரும் மாதங்கள் கடினமான மாதங்கள் தான், கொரோனாவிற்கு எதிரான போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை.

Credit: Crown Copyright

இன்னும் நாட்கள் உள்ளன என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இப்போது நாம் அனைவரும் ஒழுக்கத்தையும், உறுதியையும், வரவழைக்க வேண்டிய நேரம் இது, கூட்டாக ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம்தான் இந்த தொற்றுநோய்களின் வீதம் குறையத் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

Credit: Crown Copyright

மேலும், அடுத்த ஆண்டு வாக்கில், ஒரு தடுப்பூசி என்பது கண்டுபிடித்துவிடலாம் என்று உள்ளது. அது மக்கள் சாதரண வாழ்க்கைக்கு திரும்புவதை குறிக்கும் என்று நம்புகிறேன்,

இது தான் நம்பிக்கை, அது தான் கனவு. இது கடினம் தான், இருப்பினும் அது அடையக்கூடியது, நாங்கள் அதை செய்வதற்கு எங்களால் முடிந்தவரை கடினமாக உழைக்கிறோம். சமூகத்தின் ஊடாக வைரஸை கிழித்தெறிய அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்