மணிக்கு 110 மைல் வேகத்தில் சென்ற கார்: காரில் தொங்கியபடி வீடியோ எடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சமூக ஊடகத்தில் பிரபலமாவதற்காக மக்கள் உயிரையே பணயம் வைக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

சமீபத்தில் பிரித்தானியாவில் மணிக்கு 110 மைல் வேகத்தில் செல்லும் கார் ஒன்றிலிருந்து தொங்கியபடி ஒரு பெண் தன்னைத்தான் எடுத்துக்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மணிக்கு 110 மைல் வேகம், நான் இதை நிறுத்தியாகவேண்டும், அல்லது சாகப்போகிறேன் என்ற வாசகத்துடன் அவர் வீடியோ எடுத்துக்கொண்டிருக்க, அவர் சொன்னது போலவே சர்ரேயிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில் ஓடும் காரிலிருந்து விழுந்திருக்கிறார் அந்த பெண்.

ஆனால், யார் செய்த புண்ணியமோ, அந்த பெண் பிழைத்துக்கொண்டார். கடந்த சனியன்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக பொலிசார் ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

வீடியோவை காண

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்