பிரித்தானியாவில் கடையில் பெண் வாடிக்கையாளரின் மோசமான செயல்! சிசிடிவியில் பதிவான பகீர் காட்சி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் விதிகளை பின்பற்றும் படி கடைக்கு வந்த நபரிடம் கூறியதால், அந்த நபர் ஆத்திரத்தில் கடையின் இரண்டு அலமாரிகளில் இருந்து பொருட்களை அடித்து நொறுக்கி வீசிய வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் விதிகளைப் பின்பற்றும்படி கேட்டபோது, ​​கடைக்காரர் இரண்டு அலமாரிகளை ஒயின் அடித்து நொறுக்கினார்

கடந்த மே மாதம் கொரோனாவின் உச்சத்தில் இருந்த போது, பிரித்தானியாவில் கடுமையான ஊரட்ங்கு விதிகள் இருந்தது.

இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தேவையான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அதன் படி Lingfield-ல் இருக்கும் கடை ஒன்றில் நுழைந்த பெண் வாடிக்கையாளரிடம், கொரோனா விதிகளை பின்பற்றும் படி, அதாவது பாதிகாப்பு காரணம் கருதி ஒரு வழிமுறையை பின்பற்றும் படி அங்கிருக்கும் ஊழியர் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு ஆவேசமடைந்த அந்த பெண், ஆத்திரத்தில் கத்தியுள்ளார். அதன் பின் அங்கு வைன், பால் மற்றும் முட்டை போன்ற பொருட்கள் இருந்த இரண்டு அலமாரிகளை கீழே தள்ளி, அடித்து நொறுக்கியுள்ளார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சி இப்போது வெளியாகியுள்ளது. அந்த பெண் மீது கடை உரிமையாளர் புகார் கொடுத்தாரா? அதன் பின் என்ன நடந்தது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்