மாயமான பிரித்தானிய சிறுமி: புகார் அளித்த பெற்றோர் மீது கொலை வழக்குப் பதிந்த பொலிசார்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் கடந்த இரண்டு மாதமாக சிறுமி ஒருவர் மாயாமாகியுள்ள நிலையில், தற்போது அவர் பெற்றோர் மீது கொலை வழக்குப் பதிந்துள்ளனர் பொலிசார்.

பிரித்தானியாவின் மில்ஃபீல்ட், பீட்டர்பரோ பகுதியை சேர்ந்த 37 வயது சாரா வாக்கர் மற்றும் ஸ்காட் வாக்கர்(50) ஆகிய இருவர் மீதுமே கேம்பிரிட்ஜ்ஷைர் பொலிசார் கொலை வழக்குப் பதிந்துள்ளனர்.

கடந்த ஜூலை 21 ஆம் திகதி பகல் குடியிருப்பில் இருந்து வெளியே சென்ற 17 வயது பெர்னாடெட் வாக்கர் அதன்பிறகு குடியிருப்புக்கு திரும்பவில்லை.

இந்த நிலையில், வாக்கர் தம்பதி தங்களது மகள் தொடர்பில் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வந்தனர்.

ஆனால் இதுவரை அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், மாயமானதாக பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கடந்த வாரம் மில்ஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள பெர்னாடெட்டின் குடும்ப வீட்டில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

மட்டுமின்றி, ஜூலை 18 ஆம் திகதி வெளியே சென்ற பெர்னாடெட் வாக்கர் அதன்பிறகு ஜூலை 20 ஆம் திகதி தங்களுக்கு குறுந்தகவல் அனுப்பி, மிக விரைவில் குடியிருப்புக்கு திரும்புவேன் என தெரிவித்ததாகவும் பொலிசாரிடம் வாக்கர் தம்பதி தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதன்பின்னரும் பெர்னாடெட் வாக்கர் குடியிருப்புக்கு திரும்பாத நிலையில் ஜூலை 21 ஆம் திகதி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்