மனைவியின் ரகசிய மொபைல் போனை சோதித்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி: அதே மொபைலை பயன்படுத்தி பழிவாங்கிய கணவன்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனக்கு தெரியாமல் மனைவி ஒரு ரகசிய மொபைல் வைத்திருப்பதைக் கண்டறிந்தார் ஒரு கணவன்.

வேல்ஸிலுள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஜோன்ஸ் (52) தற்செயலாக தனது மனைவியின் ஐபோனை பார்த்தபோது, அதிலிருந்த செய்திகளிலிருந்து தன் மனைவியான ரியானானுக்கும் மைக்கேல் ஓ லியரி (55) என்ற நபருக்கும் தவறான உறவு இருப்பதை அறிந்துகொண்டுள்ளார்.

இந்த விடயம் ஆண்ட்ரூவின் மகள் கேரிக்கும் தெரிய வந்திருக்கிறது. ரியானானை கையும் களவுமாக பிடித்து இது குறித்து கேட்டபோது, தனக்கும் மைக்கேலுக்கும் தவறான உறவு இருந்தது உண்மைதான், ஆனால், மைக்கேலுக்கு தன் மனைவியை விட்டு பிரிய மனமில்லாததால், தங்களுக்குள் இருந்த உறவு முறிந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.

ஆனால், ரியானானும் மைக்கேலும் தங்களுக்குள் ரகசிய மொபைல் போன்கள் மூலம் தொடர்புகொண்டு யாருக்கும் தெரியாமல் ஊருக்கு வெளியில் சந்தித்து வந்துள்ளார்கள்.

ரியானானைஅவருக்கே தெரியாமல் ஆண்ட்ரூவும் அவரது மகளும் கண்காணித்து வந்த நிலையில், ஒரு நாள் ஆண்ட்ரூவின் கையில் ரியானானின் ரகசிய மொபைல் சிக்கியிருக்கிறது.

(பின்னர் அந்த மொபைல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டபோது, அதில் ரியானானும் மைக்கேலும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்ட, அந்தரங்க மற்றும் மோசமான செய்திகளை நீதிமன்றம் பார்வையிட்டது) மொபைல் மூலம் ரியானானும் மைக்கேலும் உறவை தொடர்வதை உறுதி செய்துகொண்ட ஆண்ட்ரூ, அதே மொபைலை எடுத்து அதிலிருந்து மைக்கேலுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

கதவைத் திறந்து வைத்திருக்கிறேன், உனக்காக காத்திருப்பேன் என்ற குறுஞ்செய்தியைக் கண்டதும், காதலியைச் சந்திக்க ஆவலாக ஓடிச் சென்றிருக்கிறார் மைக்கேல்.

அதே நாள், மைக்கேலின் மனைவி சியான்க்கு அவரது கணவரின் மொபைலிலிருந்து, என்னை மன்னித்துவிடுங்கள் என்ற குறுஞ்செய்தி அனுப்பட்டுள்ளது.

அதற்குப்பிறகு மைக்கேலின் கார் ஓரிடத்தில் நிற்க, அவரை எங்கேயும் காணவில்லை. இப்படி இருக்கும் நிலையில், அவரை பொலிசார் தேடிவரும்போது, மைக்கேலின் உடலின் ஒரு கரிந்த துண்டு ஆண்ட்ரூ வீட்டில் கிடைத்துள்ளது.

அது மைக்கேல் உடையதுதான் என DNA பரிசோதனை உறுதி செய்த நிலையில், பொலிசார் ஆண்ட்ரூவைக் கைது செய்துள்ளார்கள்.

ஆண்ட்ரூ கொலைக் குற்றச்சாட்டை மறுக்க, விசாரணை தொடர்கிறது. இன்னொரு சுவாரஸ்யமான விடயம், தன் காதலன் கொலை செய்யப்பட்டுவிட்டதை அறிந்த ரியானான், தன் கணவர் ஆண்ட்ரூவிடம், உன் மீது எனக்கு இனி காதல் கிடையாது என்று கூறிவிட்டாராம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்