மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப பிரித்தானியா கட்டாயம் இதை செய்ய வேண்டும்: கடுமையாக சாடிய பிரபல விமான நிறுவனத்தின் முதலாளி

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் தனிமைப்படுத்தப்பட்ட கொள்கை தவறான நிர்வாகத்தின் குழப்பமே என்று ரயன் ஏர் விமான நிறுவனத்தின் முதலாளி மைக்கேல் ஓ லீரி கூறியுள்ளார்.

பிரித்தானியா மற்றும் ஐரிஷ் அரசாங்கங்கள் குற்றச்சாட்டிற்கு உட்பட்டுள்ளன, பிரித்தானியாவின் தனிமைப்படுத்தல் திட்டம் குறைபாடுடையது என ஓ லீரி கூறினார்.

சர்வதேச பயணங்கள் மீண்டும் பாதுகாப்பாக பழைய நிலைக்கு திரும்புவதற்கு பிரித்தானியா விமான நிலையங்களில் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என ஓ லீரி கூறினார்.

சோதனைகள் நம்பமுடியாதவை என்பதால் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பயண தனிமைப்படுத்தல்கள் இன்றியமையாதவை என்று பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் பயண தனிமைப்படுத்தப்பட்ட கொள்கையின் படி, அதிக ஆபத்துள்ள நாடுகளுக்கு பயணிப்பவர்கள் பிரித்தானியா திரும்பும்போது இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்