பிரித்தானியாவில் அடுத்த கட்ட கொரோனா கட்டுப்பாடு அறிமுகம்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஏற்கனவே ஆறு பேருக்கு மேல் கூடுவதற்கு தடை என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டாயிற்று...

இனி அடுத்து என்ன செய்வதென கடுமையான யோசனையில் இருக்கிறார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்.

கொரோனா பரவல் குறைந்தபாடில்லை, இனி முழு ஊரடங்கையும் கொண்டு வரமுடியாது, ஏற்கனவே பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

அப்படிப் பார்த்தால், அடுத்ததாக பெல்ஜியம் நாட்டில் நடப்பதைப்போல் இரவு 10 மணியிலிருந்து ஊரடங்கை அறிமுகம் செய்யும் திட்டம்தான் சரியாக இருக்கும் என நம்புகிறார் சுகாதாரச் செயலர் Matt Hancock.

அதாவது, இனி பிரித்தானியா முழுவதிலும் இரவு 10 மணிக்கு மேல் மக்கள் யாரும் மதுபான விடுதிகளில் உட்கார்ந்து குடித்துக்கொண்டிருக்கவும் முடியாது, இளைஞர்கள் நள்ளிரவு பார்ட்டிகள் வைக்கவும் முடியாது.

இனி மக்கள் வேண்டுமானால் பகலிலேயே உணவகங்கள், மதுபான விடுதிகளிலிருந்து உணவுப்பொருட்களையும் மதுபானத்தையும் வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து சாப்பிட்டுக்கொள்ளலாம் (அதுவும் கூட்டமாக அல்ல).

அத்துடன், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை உணவகங்கள் மதுபான கடைகள் என அனைத்தும் மூடியிருக்கும்.

பெல்ஜியத்தில் இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளதால், பிரித்தானியா முழுவதற்கும் அதே திட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசித்துவருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்