ரயிலில் இருந்து இறங்கியதும் எதையோ மறந்தது நினைவுக்கு வர அவசரமாக ஓடிய பெண்: எதை மறந்தார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டன் ரயில் நிலையம் ஒன்றில் ரயிலுக்கு காத்திருந்த பயணிகள் சிலர், ரயில் காலதாமாவதன் காரணம் தெரியாமல் விழித்துக்கொண்டு நிற்கிறார்கள்.

ஆனால், முந்தைய ரயில் நிலையமான Peckham Rye ரயில் நிலையத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றது அவர்களுக்குத் தெரியாது.

ஆம், அங்கு ஒரு இளம்பெண் ரயிலிலிருந்து அவசர அவசரமாக இறங்கியிருக்கிறார்.

இறங்கியபிறகுதான் தான் எதையோ மறந்துவிட்டது அவருக்கு நினைவுக்கு வந்திருக்கிறது.

அவர் எதை மறந்தார் தெரியுமா? அவர் பெற்ற குழந்தையை!

அப்புறம் என்ன, குய்யோ முறையோ என்று கத்திக் கூச்சலிட்டு ரயில் நிலைய அதிகாரிகளிடம் புகாரளிக்க, அவர்கள் அடுத்த ரயில் நிலையத்திற்கு தகவல் கூறி, ரயிலை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

பிறகு வேறொரு ரயிலைப் படித்து அரக்கப்பரக்க ஓடி, அடுத்த ரயில் நிலையத்தில் அம்மாவைக் காணாமல் அழுதுகொண்டிருந்த குழந்தையை கட்டிப்பிடித்து அழுதிருக்கிறார்.

இப்படி ஒரு பெண், பெற்ற குழந்தையையே மறந்த சம்பவத்தை சமூக ஊடகத்தில் மக்கள் போட்டு கிழி கிழியென்று கிழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்