அவனை பார்த்தால் யாரும் அருகில் சென்று அணுக வேண்டாம்! லண்டனில் பெண்ணை சீரழித்த நபர் குறித்து பொலிசார் எச்சரிக்கை

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் பெண்ணை சீரழித்த வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், Aydimire Tahir (47) என்ற நபர் மீது பெண்ணை சீரழித்தது தொடர்பான வழக்கு உள்ளது.

ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவர் தலைமறைவாக உள்ளார்.

Aydimire Tahir லண்டனின் Beckenham அல்லது Croydon பகுதியில் இருக்கலாம். அவரை யாராவது பார்த்தால் அருகில் சென்று அணுகக்கூடாது என எச்சரிக்கிறோம்.

அதற்கு பதிலாக பொலிசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் அவன் அடையாளத்தை தெரிந்து கொள்ளவே புகைப்படத்தை வெளியிட்டுளோம். Ayken என்ற பெயரையும் Aydimire Tahir பயன்படுத்துவார் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்