இங்கிலாந்து அரசாங்கத்தால் ஐக்கிய இராச்சிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்: ஸ்காட்லாந்து-வேல்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Basu in பிரித்தானியா

இங்கிலாந்து அரசாங்கத்தின் உள் சந்தை மசோதா, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் இருந்து அதிகாரங்களை பறிக்கும் ஐக்கிய இராச்சியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் தெரிவித்துள்ளன.

இந்த மசோதாவின் செயல்திட்டம் புதன்கிழமை வெளியிடப்படும். இது பிரெக்ஸிட் தொடர்பான சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைச்சர் ஒருவர் ஒப்புக் கொண்டார், மேலும் இது ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் என எச்சரித்தார்.

இங்கிலாந்து அரசாங்கத்தின் புதிய மசோதா அதிகாரப் பகிர்வு மீதான முழு முன்னணி தாக்குதல், இது வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் இருந்து அதிகாரங்களை பறிக்கும் என ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் என்று விவரித்தார்.

இந்த மசோதா ஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு பகுதிகளை ஒன்றாக இணைக்கும் ஒற்றுமையை குலைக்கும் என்று வேல்ஸ் தெரிவித்துள்ளது.

பகிர்ந்தளிக்கப்பட்ட நிர்வாகங்களிலிருந்து அதிகாரங்களை பறிப்பதன் மூலம் ஐக்கிய இராச்சியத்தின் எதிர்காலத்தை சீர்குலைக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது என்று வேல்ஸின் ஆலோசனை ஜெனரலும் ஐரோப்பிய மாற்றத்திற்கான அமைச்சருமான ஜெர்மி மைல்ஸ் கூறினார்.

இந்த மசோதா ஜனநாயகம் மீதான தாக்குதல் மற்றும் பல சந்தர்ப்பங்களில் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக வாக்களித்த வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து மக்களை அவமதிப்பதாகும் என ஜெர்மி மைல்ஸ் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்