கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை திட்டம் நிறுத்தம்! ஆக்ஸ்போர்டு அறிவிப்பு

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் ஒருவருக்கு கடுமையான எதிர்விளைவுகள் ஏற்பட்டுள்ளதையடுத்து, தடுப்பூசி சோதனை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் AstraZeneca மருந்து தயாரிக்கும் நிறுவனமும் இணைந்து தயாரித்துவரும் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை முயற்சிகள் நடந்து வரும் நிலையில், இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அது என்ன எதிர்விளைவு என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை என்றாலும், தடுப்பூசி போட்டுக்கொண்ட நபரை மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பயங்கரமான விளைவு என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

ஆனால், அவர் அந்த நபர் அந்த எதிர் விளைவிலிருந்து விடுபட்டுவிடுவார் என அந்த துறையில் அனுபவம் உள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி சோதனை முயற்சிகளின்போது இதுபோன்று தற்காலிக நிறுத்தல்கள் வழக்கமானதுதான் என்றாலும், இன்னும் சில மாதங்களில் இந்த கொடிய கொரோனாவுக்கு ஒரு தடுப்பூசி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் உலகமே இருக்கும் நிலையில், இது அந்த நம்பிக்கைக்கு கிடைத்த பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு முதலாக அனைவருமே இந்த தடுப்பூசியை ஒரு ஆபத்பாந்தவனாக எதிர்பார்த்திருந்த நிலையில் வெளியாகியுள்ள இந்த செய்தி ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

பிரித்தானிய சுகாதாரச் செயலரான Matt Hancock, 2021ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களில் அந்த தடுப்பூசி தயாராகிவிடும் என நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்