பிரித்தானியாவில் இனி இது சட்டவிரோதமானது: மீறுபவர்களுக்கு இதுதான் கதி

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் இனி ஆறு பேருக்கு மேல் சமூக கூட்டங்களில் கூடுவது சட்டவிரோதமானது என அரசாங்கம் அறிவிக்கவுள்ளதாம்.

கொரோனா வைரஸ் வழக்குகள் திடீரென அதிகரித்து இரண்டாவது அலை குறித்த அச்சத்தைத் தூண்டியதை தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் புதன்கிழமை இந்த புதிய விதியை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தத் தொடங்கிய பின்னர், நாடு தழுவிய அளவில் ஊரடங்கு நடவடிக்கையை பிரதமர் விதிப்பது இதுவே முதல் முறையாகும்.

மேலும், செவ்வாயன்று தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வழக்குகள் எண்ணிக்கை உயர்வதால் அரசாங்கத்தில் வளர்ந்து வரும் அபாய எச்சரிக்கை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது.

ஜூலை மாதம் தொடர்ந்து முதல் முறையாக பிரதமர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்கிறார், ‘வைரஸ் பரவுவதைத் தடுக்க நாம் இப்போது செயல்பட வேண்டுமென’ தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள்கிழமை முதல், ஆறு பேருக்கு மேல் சமூகக் கூட்டங்களில் கூடக் கூடாது என்ற விதியை மீறுபவருக்கு 100 பவுண்ட் ஸ்பாட் அபராதம் விதிக்கப்படும், மீண்டும் மீண்டும் விதியை மீறினால் 3,200 பவுண்ட் வரை அபராதம் இரட்டிப்பாகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்