லண்டனில் முன்னாள் மனைவி மற்றும் அவரின் நண்பர் மீது பொறாமை கொண்ட கணவன் செய்த கொடூர செயல்! நடந்ததை விளக்கிய தமிழர்

Report Print Raju Raju in பிரித்தானியா
3383Shares

லண்டனில் முன்னாள் மனைவி மற்றும் அவர் ஆண் நண்பரை கொடூரமாக தாக்கிய நபருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நடந்ததை தமிழர் ஒருவர் விளக்கியுள்ளார்.

கிழக்கு லண்டனின் Dagenham-ஐ சேர்ந்தவர் Umit Hayta (39). இவரும் பெண்ணொருவரும் 15 வருடங்களாக தம்பதியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் விவாகரத்து பெற்று Umit-ஐ அவர் மனைவி பிரிந்தார்.

இதன்பின்னர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நபர் ஒருவருடன் Umit மனைவிக்கு நட்பு ஏற்பட்டது.

இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆன நிலையில் கடந்த பிப்ரவரி 21ஆம் திகதி அப்பெண் வீட்டுக்கு ஆண் நண்பர் வந்தார்.

அப்போது வீட்டுக்குள் வேறு யாரோ புகுந்ததை இருவரும் கண்டுபிடித்தனர்.

பின்னரே அது Umit என தெரிந்தது, தன் மனைவி வேறு நபருடன் பழகுகிறாரே என பொறாமை கொண்ட Umit இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதோடு கத்தியாலும் குத்திவிட்டு தப்பியோடினார்.

இதையடுத்து இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் படுகாயமடைந்த ஆண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார், ஆனால் 18 குத்து காயங்கள் மற்றும் மூளையில் இரத்தப்போக்கு என பல சிக்கல்கள் அவருக்கு ஏற்பட்டது.

Umitன் மனைவிக்கும் படுகாயம் ஏற்பட்டது, தனது குழந்தைகளை பாதுகாக்கவும், ஆண் நண்பரை காப்பாற்றவும் முயன்ற போது அவர் தாக்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் Umit கைது செய்யப்பட்டார், கைதான போது உடைகள் முழுவதும் இரத்தம் படிந்த நிலையில் அவர் இருந்தார்.

விசாரணையின் போது, நான் ஏதோ தவறு செய்துள்ளேன். ஆம், நான் அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கினேன்.

என் மனைவியை வேறு ஒருவருடன் பார்த்ததால் இப்படி செய்தேன் என கூறினார்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து detective constable ராஜ்குமார் ஆண்டன் அருள்நாயகம் என்ற தமிழர் கூறுகையில், Umit அப்பாவி மனிதனின் மீது தொடர்ச்சியான, மிருகத்தனமான தாக்குதலை நடத்தியிருக்கிறார்.

தனது முன்னாள் அவர் மனைவியுடன் நேரத்தை செலவிட்டதற்காகவே இப்படி செய்துள்ளார்.

நல்லவேளையாக உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் காப்பாற்றப்பட்டார்.

Umitன் முன்னாள் மனைவிக்கும் கடுமையான காயம் ஏற்பட்டது.

சம்பவத்தின் போது அவரின் இரண்டு குழந்தைகளும் உடன் வீட்டில் இருந்தார்கள் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்