பிரித்தானியாவில் டீசல் ரயில் ஒன்று கவிழ்ந்து தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேல்ஸில், ஆயிரக்கணக்கான கேலன்கள் எண்ணெயைக் கொண்டு செல்லும் ரயில் ஒன்றின் மூன்று பெட்டிகள் Llanelli என்ற பகுதிக்கருகே தடம் புரண்டதில் அவை தீப்பற்றியுள்ளன.
அந்த ரயிலில் இரண்டு ஊழியர்கள் இருந்துள்ள நிலையில், அவர்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
ரயில் எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறலாம் என்பதால் அப்பகுதியிலுள்ள 300க்கும் அதிகமான குடும்பங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
உள்ளூர் மக்கள், சம்பவ இடத்திலிருந்து வானுயரத்திற்கு புகை எழும்புவதைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
எதனால் அந்த விபத்து நேர்ந்தது என்பதை, அந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பின்னரே கண்டுபிடிக்க இயலும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிவதையும், வானுயரத்திற்கு புகை எழும்புவதையும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதையும் காணலாம்.