பிரித்தானியாவிலுள்ள கறிக்கோழி தொழிற்சாலையில் 75 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று: 350 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
561Shares

பிரித்தானியாவிலுள்ள கறிக்கோழி பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் 75 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலை மூடப்படவேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

நார்போல்க்கிலுள்ள அந்த தொழிற்சாலையில் கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 350 கும்பங்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளியன்று அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவர் தனக்கு உடல் நலமில்லை என கூறியதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திங்கட் கிழமைக்குள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 15 பேரில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது 400 பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 75 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இதேபோல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் பலவற்றில் கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் மட்டும் இதுவரை குறைந்தது 40 இடங்களில் தற்போது கொரோனா பரவிவருவதாக உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்