லண்டன் விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானம்: திடீரென பாதுகாப்பு உடையுடன் நுழைந்த அதிகாரிகளால் பரபரப்பு

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனிலிருந்து இத்தாலி புறப்பட இருந்த விமானம் ஒன்றில், கடைசி நேரத்தில் முழு பாதுகாப்பு உடைகளுடன் சுகாதாரத்துறை அலுவலர்கள் நுழைந்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

விமானத்திலிருந்த பயணி ஒருவருக்கு அறிமுகமான ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததையடுத்து அந்த பயணிக்கு மொபைல் தொலைபேசியில் தகவலளிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் அவர் விமானத்தில் ஏறியிருந்ததால், சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து அவரை Stansted விமான நிலையத்திலுள்ள தனிமைப்படுத்தல் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

திடீரென பாதுகாப்பு உடையுடன் அலுவலர்கள் நுழைந்ததால் சுற்றுலா செல்ல தயாராக பயணிகள் பரபரப்படைந்தனர்.

ஆனால், அந்த குறிப்பிட்ட பயணி மற்றும் அவருடன் வந்த இருவரும் மட்டும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, அவர்கள் உட்கார்ந்திருந்த இருக்கைகள் மற்றும் அவர்கள் உடைமைகள் வைக்கப்பட்டிருந்த இடம் ஆகியவை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டபின், 40 நிமிடங்கள் தாமதமாக அந்த விமானம் இத்தாலியில் உள்ள பைசா நகருக்கு பறந்து சென்றது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்