பிரித்தானியா பள்ளிகளில் முக கவசம் அணிவது கட்டாயம்

Report Print Fathima Fathima in பிரித்தானியா
716Shares

பிரித்தானியாவில் பொது முடக்கம் அமுலில் உள்ள பள்ளிகளில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து பள்ளிகளில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவின்படி, 12 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் ஆகியோா் பள்ளிகளுக்கு அவசியம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.

இதற்கு முன்னதாக பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படாது என பிரித்தானியா கல்வித்துறை அறிவித்த நிலையில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்