லண்டனில் பயங்கரம்! 2 மணி நேரத்திற்குள்... அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண்-பெண்

Report Print Santhan in பிரித்தானியா
1090Shares

லண்டனில் இரண்டு மணி நேர இடைவெளிக்குள் அடுத்தடுத்து இரண்டு சம்பவங்களாக ஆண் மற்றும் பெண் என இருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Dagenham-ல் உள்ளூர் நேரப்படி சரியாக 12.50 மணிக்கு ஒரு குறிப்பிட்ட முகவரியில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

குறித்த பெண்ணின் மரணம் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் குறித்த பகுதியில் இருந்து ஒரு மைல் தொலைவில் அதே 30 வயதிற்கு மேற்பட்ட ஆண் நபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

(Picture: Marcin Nowak/LNP)

இந்த இரண்டு பேரின் மரணமும் தொடர்புடையவையாக இருக்கலாம் என்று பொலிசார் நம்புகின்றனர். ஆனால் இதுவரை யாரையும் இந்த சம்பவம் குறித்து தேடவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து Barking மற்றும் Dagenham பொலிசார் கூறுகையில், கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை அன்று 12.50 மணியளவில் Dagenham-ன் Whalebone நகருக்கு பொலிசார் அழைக்கப்பட்டனர்.

metro.co.uk

உடனடியாக அங்கு விரைந்து பார்க்கும் போது 30 வயதிற் மேற்பட்ட பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இந்த சம்பவத்தின் பரபரப்பே இன்னும் குறையாமல் இருந்த நிலையில், உள்ளூர் நேரப்படி 2.50 மணிக்கு Dagenham-ன் Gosfield சாலையில், 30 வயதிற்கு மேற்பட்ட நபர் இறந்து கிடந்தார்.

இந்த இரண்டு மரணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று நம்பப்படுகிறது. தற்போது நாங்கள் இந்த விசாரணைகள் தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நாட்டின் தலைநகர் லண்டனில் அடுத்தடுத்து இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்து கிடப்பது ஒரு வித பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

(Picture: Marcin Nowak/LNP)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்