பிரித்தானிய துறைமுகம் ஒன்றின் அருகில் பெரும் வெடி விபத்து: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1227Shares

பிரித்தானியாவிலுள்ள சசெக்ஸ் துறைமுகத்தின் அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் பெரும் வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக விபத்தைக் கண்ணால் கண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சசெக்ஸ் துறைமுகத்துக்கு அருகிலுள்ள Newhaven பகுதியில் ஒரு தொழிலக கட்டிடம் ஒன்றில் பிடித்துள்ள தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

துறைமுகத்துக்கு அருகிலுள்ள சேமிப்பகம் ஒன்றில் பெரும் வெடிச்சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்துள்ள நிலையில், அப்பகுதியே புகைக்காடாக காட்சியளிக்கிறது.

தீயணைப்பு வீரர்கள் அங்கு செல்லவேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

அத்துடன் தொழிலக கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்துள்ளதால், கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிக்கொண்டு வீட்டுக்குள் இருக்கும்படி பொலிசாரும் பொதுமக்களை எச்சரித்துள்ளார்கள்.

அந்த தீவிபத்தில் இதுவரை யாருக்கும் காயம் எதுவும் பட்டதாக தகவலில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்