பிரித்தானியாவில் பெண் மீதும் நாய் மீதும் காரை மோதிவிட்டு தப்பியவர்கள் தொடர்பில் வெளியான செய்தி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
258Shares

பிரித்தானியாவில், சாலையில் நாயுடன் வாக்கிங் சென்ற பெண் மீதும் நாய் மீதும் காரை மோதிவிட்டு, உதவாமல் ஓடியவர்களில் ஒருவர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன் நாயுடன் வாக்கிங் சென்ற ஒரு பெண் மற்றும் அவரது நாய் மீது கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் மோதியது.

இந்த சம்பவத்தில் அந்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அந்த பெண் பலத்த காயமடைந்தார், அவரது காலும் உடைந்தது.

இதற்கிடையில் அவரை மோதித்தள்ளியவர்கள், கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் அவரை இரத்த வெள்ளத்தில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடினார்கள்.

இந்த சம்பவத்தைக் காட்டும் CCTV கமெரா காட்சிகள் வெளியாகி மக்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தின.

CCTV காட்சிகளை வெளியிட்ட பொலிசார், பொதுமக்களிடம் உதவி கோரியதோடு, குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்தார்கள்.

இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய, பர்மிங்காமைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் விபத்தை ஏற்படுத்திய அந்த காரை ஓட்டியவர் என நம்பப்படுகிறது. காவலில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்