அதிகாலையில் கணவர் வந்து மனைவியை பரபரப்பாக எழுப்ப, அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பயந்துபோய் எழுந்திருக்கிறார் அவரது மனைவி! ஆனால், கணவர் சொன்ன அந்த செய்தி மனைவியை மட்டுமல்ல, மொத்தக் குடும்பத்தையும் ஆனந்தக் கண்ணீர் வடிக்கச் செய்துவிட்டது.
பிரித்தானியாவின் Nortonஐச் சேர்ந்த David (61), மற்றும் அவரது மனைவி Shelley Adams (52) ஆகிய இருவரும் கடந்த ஆண்டிலிருந்தே பல துயர செய்திகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
சென்ற ஆண்டு, Shelleyக்கு Multiple sclerosis என்ற பிரச்சினை இருப்பது தெரியவந்ததையடுத்து, அவரது வேலையை அவர் விட நேர்ந்தது. அந்த சோகம் மறப்பதற்குள், ஏப்ரல் மாதம் Shelleyயின் தங்கை மாரடைப்பால் இறந்துபோனார்.
இரண்டு வாரங்கள் கழித்து, மே மாதம் Shelleyயின் தங்கையின் கணவர் கொரோனாவுக்கு பலியானார்.
இப்படி வரிசையாக துக்க செய்திகளே வந்துகொண்டிருந்த நிலையில், கடைசியாக Davidக்கு ஒரு செய்தி வந்தது, ஆம், அவருக்கும் வேலை போய்விட்டது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், அதிகாலையில் அவர் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை எழுப்ப, அவரது உடல் நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்ட Shelleyக்கு பயம் வந்து விட்டது, கணவருக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று.
பதறிப்போய் அவர் எழும்ப, அந்த செய்தியைச் சொன்னார் David. நீண்ட நாட்களாக கெட்ட செய்திகளையே கேட்ட Shelleyக்கு அந்த செய்தியைக் கேட்க, காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது.
அந்த செய்தி, Davidக்கு லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது என்பதுதான்.
முதல் காரியமாக, பக்கத்து அறையில் வேலைக்கு செல்வதற்காக காலையிலேயே எழுந்திருந்திருக்க வேண்டிய தங்கள் மகனை எழுப்பி, அந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்ல, குடும்பமே கட்டியணைத்துக்கொண்டு சந்தோஷத்தில் கண்ணீர் வடித்திருக்கிறது.
ஒரு நல்ல வாகனம் கூட இல்லாத நிலையில், முதலில் ஒரு கார் வாங்கவேண்டும் என்று கூறினாலும், தங்களுக்கு பணக்கஷ்டம் என்றால் என்ன சென்று தெரியும் என்று கூறும் தம்பதியர், தாங்கள் அவசரப்பட்டு பணத்தை செலவிடப்போவதில்லை, பொறுமையாக திட்டமிட்டுதான் அடுத்த நடவடிக்கை என்கிறார்கள் புத்திசாலித்தனமாக!