கொரோனாவால் பிரிக்கப்பட்ட குடும்பம்... உலகை உலுக்கிய அந்த ஒற்றைப் புகைப்படத்தை நினைவிருக்கிறதா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
179Shares

ஒரு கண்ணாடிக் கதவுக்கு அந்த பக்கம் தாத்தாவும் பாட்டியும், இந்த பக்கம் பேரக்குழந்தைகள்... ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொள்ள முடியாமல் ஏமாற்றமும் ஏக்கமுமாக இரண்டு தலைமுறைகள் தவித்த தவிப்பை பட்டவர்த்தமாக வெளிப்படுத்தியது அந்த ஒற்றைப் புகைப்படம்!

பேரக்குழந்தைகள் இவ்வளவு இனிமையானவர்கள் என்று முன்பே தெரிந்திருந்தால், நேரடியாக பேரக்குழந்தைகளையே பெற்றிருக்கலாமே என்ற பிரபல சொல் வழக்கு ஒன்று மேலை நாடுகளில் உண்டு.

அப்படிப்பட்ட தாத்தா பாட்டி, பேரக்குழந்தைகளை பிரித்துவைத்து வேடிக்கை பார்த்த கொரோனாவைக் கண்டு, ஒவ்வொரு தாத்தா பாட்டியும் பயந்தார்கள்.

அப்படிப்பட்ட ஒரு மறக்கமுடியாத காட்சியில் இடம்பெற்ற அனைவரும் மீண்டும் சந்தித்து அளவளாவும் ஒரு காட்சி இப்போது வெளியாகி உள்ளங்களை பூரிக்கச் செய்துள்ளது.

ஆம், Florence (4) மற்றும் Edith Johnson (2) என்னும் அந்த குழந்தைகளுக்கு, தங்கள் தாத்தா Ray (81) மற்றும் பாட்டி Theresaவை (81) சந்திக்க அனுமதி கிடைத்துவிட்டது.

கொரோனாவால் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறி அரசு சமூக விலகல் விதிகளை கடுமையாக்கியது.

அதிலும், பாட்டி Theresa புற்று நோய்க்கான சிகிச்சையில் இருந்தார், அத்துடன் அவருக்கு பார்க்கின்சன் பிரச்சினையும் இருந்ததால், வேறு வழியேயின்றி தாத்தா பாட்டியும் பேரக்குழந்தைகளும் பிரிக்கப்பட்டார்கள்.

தற்போது Theresaவுக்கு சிகிச்சையும் முடிந்துவிட, மருத்துவர்களே தங்கள் பேரக்குழந்தைகளை கொஞ்சலாம் என்று அனுமதியளித்துவிட, மீண்டும் இரு தலைமுறையினரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொஞ்சிக் குலாவும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இன்னொரு முக்கியமான விடயம், Florence மற்றும் Edith Johnson, Ray மற்றும் Theresaவின் பிள்ளைகளின் பிள்ளைகள் அல்ல, பேத்தி Vickieயின் (30) குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்