புதிதாக திருமணமான மகனுக்கு நேர்ந்த சோகம் தெரியாமல் கொரோனாவால் கோமாவிலிருக்கும் பிரித்தானிய தாய்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தன் மகனுக்கு நேர்ந்த சோகம் அறியாமல் கொரோனா தாக்கி கோமா நிலையிலிருக்கிறார் ஒரு பிரித்தானிய தாய்!

Bradfordஐச் சேர்ந்த Muhammed Bilal Zeb (18), Dales நதியிலுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் குளித்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நதியில் மூழ்கியிருக்கிறார். உடனே பொதுமக்களும், மீட்புக்குழுவினரும் அவருக்கு உயிர் காக்கும் முதலுதவிகள் செய்து அவரது உயிரைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள்.

ஆனால், அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இதில் சோகம் என்னவென்றால், Bilal Zebஇன் தாய், கொரோனாவால் மருத்துவமனையில் கோமா நிலையிலிருக்கிறார்.

இன்னொரு அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், Bilal Zebக்கு 5 வாரங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது.

இளம் மனைவியையும், சுயநினைவின்றி இருக்கும் தாயையும் விட்டு விட்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் Bilal Zeb.

உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் Bilal Zebக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்