கடற்கரை நோக்கி படையெடுக்கும் பிரித்தானியர்களுக்கு மருத்துவரின் முக்கிய எச்சரிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கடற்கரைக்குச் செல்லும் போது ஒரு முக்கியமான பொருளை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

இந்த வார இறுதியில் மூன்று நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியர்கள் கடற்கரைக்கு படையெடுக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்த நிலையில் பிரித்தானியர்களுக்கு நன்கு அறிமுகமான மருத்துவர் அமீர்கான், கடற்கரைக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரைகளில் கை கழுவும் வசதிகள் பொதுவாக இல்லாததால் வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் தங்களுடன் hand-sanitiserகளை முக்கியமாக எடுத்துச் செல்ல வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டுமின்றி, வைரஸ் துகள்களைக் கொல்வதில் சூரிய ஒளி ஓரளவு மட்டுமே பயனுள்ளதாக இருப்பதால் சமூக விலகல் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும்படி மக்களுக்கு அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

நீங்கள் இன்னொருவருடன் இரண்டு மீற்றர் இடைவெளிக்குள் நின்று கொண்டிருந்தால், அவர் தும்மினால் அல்லது சத்தமாகப் பேசுகிறார்களானால், நீங்கள் சுவாசிக்கும் போது அவர்கள் அனுப்பிய நீர்த்துளிகள் உங்களை பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

கடற்கரையில் இருப்பதனால் புற ஊதா கதிர்கள் அதை கட்டுப்படுத்தும் என்றால், அதுதான் இல்லை என்கிறார் மருத்துவர் அமீர்கான்.

வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாக்க நீங்கள் சூரிய ஒளியை நம்ப முடியாது என்பதை தெளிவுப்படுத்துவது முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக மக்கள் கடற்கரை நோக்கி படையெடுக்கின்றனர். இன்று பிரைட்டனில் சுமார் 150,000 பேர்கள் குவியலாம் எனவும் போர்ன்மவுத்தில் 100,000, கிரேட் யர்மவுத்தில் 75,000 மற்றும் பிளாக்பூலில் 75,000 எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்