விமான நிலையத்தில் யாரும் வரவேற்கவில்லை! கொரோனா பீதிக்கு இடையே லண்டன் சென்ற நடிகர் தலைவாசல் விஜய்யின் அனுபவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

கொரோனா அச்சத்துக்கு இடையே லண்டனுக்கு சென்றுள்ள பிரபல நடிகர் தலைவாசல் விஜய் அது குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்தர நடிகராக உள்ளவர் தலைவாசல் விஜய். இவர் பெல்பாட்டம் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்த முடிவு செய்த படக்குழுவினர் அதற்காக சமீபத்தில் அங்கு புறப்பட்டு சென்றனர்.

அவர்களுடன் தலைவாசல் விஜய்யும் கிளம்பி சென்றார்.

கொரோனா அச்சத்துக்கு இடையே லண்டனில் உள்ள தலைவாசல் விஜய் கூறுகையில், ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றது வித்தியாசமான மற்றும் தனித்துவமான அனுபவமாக இருந்தது. விமான நிலையத்தில் ஒருவர் கூட எங்களை வரவேற்க வரவில்லை.

முழு விமான நிலையமும் பிபிஇ சூட்ஸுடன் பயோ வார் மண்டலத்தில் இருப்பது போன்று உள்ளது.

நாங்களே எங்களுடைய லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு தங்கியிருக்கும் ஹொட்டலுக்கு சென்றோம்

மேலும் ஒவ்வொரு நடிகரும் தனிமைப்படுத்துதல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும், ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு மருத்துவர் ஏற்பாடு செய்துள்ளனர் என்றும், படப்பிடிப்பிற்கு முன்னர் முழு அளவில் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்