பிரித்தானியாவில் நாளை முதல்... இந்த 3 நாடுகளில் இருந்து வருபவர்களும் தனிமைப்படுத்த வேண்டும்! அரசு திடீர் அறிவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் வகையில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பெல்ஜியம், பஹாமஸ் மற்றும் அண்டோரா ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் நிச்சயம் தனிமைபடுத்த வேண்டியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை ஐரோப்பிய நாடுகளை தாக்குவதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால், பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் பல்வேறு விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன் படி பாதுகாப்பில்லாத நாடுகளில் இருந்து பிரித்தானியாவிற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில், தற்போது பெல்ஜியம், பஹாமஸ் மற்றும் அண்டோரா ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் நிச்சயம் இரண்டு வாரம் தனிமைபடுத்தப்படுத்த வேண்டியிருக்கும் என்று போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த இடங்களிலிருந்து சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 4.00 மணிக்கு பிறகு நீங்கள் பிரித்தானியாவில் நுழைந்தால், 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தனிமைபடுத்த வேண்டும் என்றால் இரண்டு வாரங்கள் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்