பாப்கார்னால் பறிபோன 14 வயது லண்டன் சிறுவனின் உயிர்: வெளியான பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் பெற்றோருடன் சினிமாவுக்கு சென்ற போது சாப்பிட்ட பாப்கார்னால் 14 வயதேயான சிறுவன் மரணமடைந்த விவகாரத்தில் இன்று விசாரணை துவங்கப்பட்டுள்ளது.

திறமையான ஐஸ் ஹொக்கி வீரரான சிறுவன் ரூபன் பாஸ்கெட் கடந்த 2018, ஏப்ரல் 18 அன்று ஒவ்வாமை காரணமாக மரணமடைந்தார்.

சம்பவத்தன்று ரூபன் தமது பெற்றோருடன் அருகாமையில் உள்ள IMAX திரையரங்கில் சினிமாவுக்கு சென்றுள்ளார்.

பால் பொருட்களில் ஒவ்வாமை கொண்ட சிறுவன் ரூபன், திரையரங்கில் இருந்து பாப்கார்ன் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென்று சிறுவனின் உடல் நிலையில் மாறுதல் ஏற்படவே, திரைப்படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரூபனும் பெற்றோரும் குடியிருப்புக்கு திரும்பியுள்ளனர்.

சிறு வயது முதலே ரூபன் அந்த திரையரங்கிற்கு பெற்றோருடன் சென்று வந்த நிலையில், இதற்கு முன்னரும் அங்கே பாப்கார்ன் சாப்பிட்டுள்ளார்.

ஆனால் சம்பவத்தன்று ஒவ்வாமை ஏற்பட்டால் எடுத்துக் கொள்ளவேண்டிய மருந்தை கொண்டு செல்லவில்லை என கூறப்படுகிறது.

சிறுவனின் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பாப்கார்ன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பால் பொருளால் சிறுவன் ரூபனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

இதனிடையே, திரையரங்கத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பியதும் ரூபனின் தாயார் இரண்டு முறை அவனது EpiPen பயன்படுத்தியுள்ளார்.

ஆனால் இரண்டாவது முறை EpiPen பயன்படுத்திய போது, சிறுவன் ரூபன் சுயநினைவற்று சரிந்துள்ளான். தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

சிறுவனின் மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அடுத்த சில நாட்கள் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்