இனி இந்த நாட்டிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கு புதிய விதி அமல்? வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா

இனி பெல்ஜியத்திலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்த பின்னர் பிரித்தானியா அரசாங்கம் பெல்ஜியத்திலிருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கொரோனா தொடர்பான அனைத்து நாடுகளுக்கும் பிரதேசங்களுக்குமான தரவை நாங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறோம்.

மேலும் கொரோனா தொடர்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டால், பயணிகள் அதை அறியும் வகையில் www.gov.uk என்ற தளத்தில் வாரம் வாரம் தகவலை புதுப்பித்து வெளியிடுகிறோம் என்று போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பிரித்தானியா அரசு ஏற்கனவே ஸ்பெயின் மற்றும் லக்சம்பேர்க்கில் இருந்து வரும் பயணிகளுக்கு 14 நாள் தனிமைப்படுத்தலை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்