லண்டனில் மரங்கள் அடர்ந்த பகுதிக்கு தவறுதலாக நள்ளிரவில் வந்த இளம்பெண்! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் இரவு நேரத்தில் இளம்பெண்ணை துஷ்பிரயோகம் செய்து மோசமாக நடந்து கொண்ட இளைஞன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லண்டனின் Catford Bridge இரயில் நிலையம் அருகில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் தான் இந்த சம்பவம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி நள்ளிரவு 11.30 மணியளவில் நடந்துள்ளது.

29 வயது இளம் பெண்ணொருவர் டாக்சியில் பயணித்த நிலையில் தவறுதலாக அந்த பகுதியில் இறக்கப்பட்டுள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த Danut Bulboana (21) என்பவர் அப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் சத்தம் போட்டு கத்த முயன்ற போது அவர் வாய்க்குள் கட்டாயப்படுத்தி எதோ ஒரு பொருளை அடைத்து அவளை மூச்சுத் திணறடித்துள்ளான் Bulboana.

பின்னர் அவரை அழைத்து கொண்டே இரயில் நிலையம் அருகில் Bulboana சென்ற போது அப்பெண் பொலிசுக்கு போன் செய்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு பொலிசார் வருவதற்குள் Bulboana தப்பியோடியுள்ளான்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பொலிசார் விசாரணை நடத்தி Bulboana-ன் அடையாளங்களை அறிந்து கொண்டனர்.

அதே சமயம் தன்னுடைய அடையாளங்களை மறைக்கும் வகையில் உடைகள் மற்றும் தோற்றத்தை மாற்றிய நிலையில் Bulboana இருந்துள்ளான்.

ஆனாலும் அவனை பொலிசார் கைது செய்தனர். Bulboana மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவன் குற்றவாளி என நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.

மேலும் Bulboanaக்கான தண்டனை விபரம் செப்டம்பர் 8ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்