பெய்ரூட் பயங்கர வெடி விபத்திற்கு பிறகு? ஒரு ஒளிரும் சிவப்பு மேகம் போன்று... அங்கிருக்கும் பிரித்தானியா பெண் சொன்ன தகவல்கள்

Report Print Santhan in பிரித்தானியா

பெய்ரூட் துறைமுக வெடிவிபத்தின் போது வானில் தான் கண்ட காட்சிகளை விவரித்துள்ளார் பிரித்தானியாவை சேர்ந்த Claire Malleson.

பிரித்தானியாவின் Dorset பகுதியை சேர்ந்தவர் Claire Malleson, பெய்ரூட்டில் அமைந்திருக்கும் American University-யில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்த விபத்து குறித்து அவர் கூறுகையில், விபத்து நடந்த இடத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் பல்கலைகழக வளாகத்தில் நான் இருந்தேன்.

(Image: PA)

மிகப்பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதும் எங்கள் வளாகத்துக்குள் நடந்திருக்குமோ என்று தான் நினைத்தேன்.

அவ்வெடிப்பு வானில் பாரிய புகையுடன் ஒளிரும் சிவப்பு மோகம் போன்று இருந்ததாக தெரிவித்துள்ளார்.

தனக்கு தோன்றிய முதல் எண்ணமே, குடியிருப்பு வளாகத்துக்கு சென்று பெற்றோரிடம் இதை பற்றி கேட்க வேண்டும் என தோன்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குடியிருப்பு வளாகத்தில் அனைவரும் பயத்துடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்ததாகவும், வெடிப்புக்கு முன்னால் சிறிய நிலநடுக்கத்தை அவர்கள் உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்