100 அடி உயர நீவீழ்ச்சியிலிருந்து விழுந்த 6 வயது சிறுமி: இப்போது எப்படியிருக்கிறாள் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 100 அடி உயர நீர்வீழ்ச்சி ஒன்றிலிருந்து விழுந்த 6 வயது சிறுமி ஒருத்தி, கள்ளங்கபடமின்றி தான் விழுந்ததைக் குறித்து சைகையுடன் விவரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வேல்சிலுள்ள நீர் வீழ்ச்சி ஒன்றிலிருந்து தவறி விழுந்திருக்கிறாள் Phoebe என்ற அந்த சிறுமி.

100 அடிக்கும் கூடுதலான உயரமுள்ள நீர் வீழ்ச்சியில் அந்த சிறுமி விழுவதைக் கண்டு பயந்து அந்த சிறுமியின் தாய் கூச்சலிட, அவரது கணவரான Liam Bolland, குழந்தையைக் காப்பாற்றுவதற்காக தானும் உடனே குதித்திருக்கிறார்.

வெளியாகியுள்ள வீடியோவில், தான் தண்ணீருக்குள் தவறி விழுந்ததாக கூறும் Phoebe, தான் தண்ணீரின் மேற்பரப்புக்கு வர முயன்றாலும் தண்ணீர் தன்னை கீழ் நோக்கி இழுத்ததாக கூறுகிறாள்.

பயமாக இருந்ததா என்று கேட்டால், ஆம், ஆனால் கொஞ்சம்தான் பயமாக இருந்தது என்கிறாள் Phoebe புன்னகையுடன்.

அவளது தாயின் கணவர் தண்ணீருக்குள் குதித்த நிலையில், தன்னாலும் தண்ணீர்ப்பரப்புக்கு மேலே வரமுடியவில்லை, தண்ணீர் தன்னை கீழ் நோக்கி இழுத்தது என்கிறார் அவரும்.

நல்ல வேளையாக ஒரு நல்ல மனிதர் சிறுமியை கரைக்கு இழுத்துக்கொண்டு வந்துள்ளார். உடனே Phoebeஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அதிசயிக்கும் வண்ணமாக, குழந்தையில் கையில் சிறு கீறல்கள் தவிர வேறு காயங்களே இல்லையாம்.

இப்போது சற்றும் பயமின்றி தனக்கு நடந்ததை Phoebe விவரிப்பதைக் கேட்டால் நமக்கு உடல் சிலிர்க்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்