குழந்தையாக கழிவறையில் விட்டுச் செல்லப்பட்ட பெண்: அண்ணனை தேடிக் கண்டுபிடித்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

குழந்தையாக இருக்கும்போது தாயால் கழிவறையில் கைவிடப்பட்ட பெண் ஒருவர், தன் அண்ணனை கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்தபோது, அவர் கூறிய தகவல்கள் கடும் அதிர்ச்சியை அளிப்பதாக இருந்துள்ளன.

பிரித்தானியாவின் Bath என்ற பகுதியில் வாழும் Fi Beazer என்ற பெண்ணுக்கு, அவர் வளர்ந்தபோது, தான் தத்தெடுக்கப்பட்டவள், தன்னை இப்போது வளர்ப்பவர்கள் தன் சொந்த பெற்றோர்கள் அல்ல என்ற உண்மை தெரியவந்துள்ளது.

தன்னை தன் தாய், 1962ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி, கழிவறை ஒன்றில் சாக விட்டு விட்டு சென்றதையும், அழுகை சத்தம் கேட்ட ஒருவர் தன்னை காப்பாற்றியதையும் அறிந்துகொண்டார் Fi Beazer.

தன் பெற்றோரையும், உடன் பிறந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நீண்ட காலமாக தேடிக்கொண்டிருந்திருக்கிறார் Fi Beazer.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் உதவியால் தனக்கு மூன்று தங்கைகளும் ஒரு தம்பியும் இருப்பதை தெரிந்துகொண்டார் அவர்.

DNA சோதனை செய்தபோது, அந்த தங்கைகள் தன் தந்தைக்கும் வேறொரு பெண்ணுக்கும் பிறந்தவர்கள் என்றும், தன் தம்பியும் தானும் ஒரே தாய்க்கு பிறந்தவர்கள் என்பதையும் தெரிந்துகொண்டார் Fi Beazer.

தன் தம்பியை சந்தித்தபோது, அம்மாவையும் பெற்றோர் மற்றும் தம்பியுடனான வாழ்க்கையையும் தான் மிஸ் பண்ணிவிட்டதாக Fi Beazer கூற, அதற்கு அவரது தம்பியான Stephen கூறிய பதிலும், அதைத் தொடர்ந்து தங்கள் கடந்த காலம் குறித்து அவர் கூறிய வார்த்தைகளும் Fi Beazerஐ அதிர்ச்சியில் தலை கவிழவைத்தன.

நீ எதையும் மிஸ் பண்ணவில்லை என்று கூறிய Stephen, 20 ஆண்டுகளும் வீட்டில் நான் கொடுமையான வாழ்க்கைதான் வாழ்ந்தேன் என்றார்.

அதற்குப்பின் அவர் கூறிய விடயங்கள் Fi Beazerஐ கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. ஆம், தங்கள் தந்தைக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருக்க, மனைவிக்குத் தெரிந்தே அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தததாகவும், அந்த பெண்ணுக்கு தவறான வழியில் பிறந்தவர்கள்தான் தாங்கள் இருவரும் என்று Stephen கூற, Fi Beazer அவமானத்தில் தலை குனிந்துகொண்டார்.

அவர் அதற்குப்பின் சொன்ன விடயம், தான் தத்துப்பெற்றோருடன் வளர்ந்த வாழ்க்கையே நன்றாகத்தான் இருந்தது என்று எண்ணவைத்தது.

நான் வீட்டுக்கு வரும்போது, ஒரு முறை கூட தன் தாய் தனக்கு தேநீர் தந்ததில்லை என்றும், தந்தையின் மனைவிதான் தனக்கு தேநீர் தருவார் என்றும், அவர் மட்டும் இல்லையென்றால், தான் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியவில்லை என்றும், தன் தந்தையின் மனைவிதான் தன் தாயை விட தன்னை நன்றாக கவனித்துக்கொண்டார் என்றும் கூறினார் Stephen.

Stephen சொன்னதைக் கேட்ட Fi Beazer, கடந்த காலத்தை நினைத்துப்பார்த்து, தன் தாய் தன்னை கழிவறையில் விட்டுச் சென்றபோது, அவர் எந்தப் பக்கம் சென்றிருந்தாலும், நிச்சயம் தனது அழுகுரல் அவருக்கு கேட்டிருக்கத்தானே செய்திருக்கும் என்கிறார்.

அதேபோல், அவர் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இன்னும் கொஞ்ச நேரம் அந்த குழந்தை அந்த கழிவறையிலேயே கிடந்திருந்தால், குளிரிலும், இரத்தப்போக்காலும் இறந்துபோயிருப்பாள் என்று கூறியதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்