லண்டனில் 12 வயது சிறுவனை வீட்டிற்குள் புகுந்து அதிரடியாக கைது செய்த பொலிசார்! ஏன்? பீதியில் உறைந்து நின்ற தாய்

Report Print Santhan in பிரித்தானியா
1941Shares

லண்டனில் 12 வயது சிறுவன் துப்பாக்கி வைத்திருப்பதாக கைது செய்யப்பட்ட நிலையில், இறுதியில் அது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Camden-ல் இருக்கும் வீடு ஒன்றை கடந்த 17-ஆம் திகதி நபர் ஒருவர் கடந்து சென்ற போது, அந்த வீட்டில் கருப்பு நிற ஆண் நபர் துப்பாக்கி ஒன்றை வைத்திருப்பதாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் குறித்த பகுதிக்கு உடனடியாக விரைந்து வீட்டை சோதித்து பார்த்துள்ளனர். அப்போது 12 வயது மதிக்கத்தக்க Kai Agyepong என்ற சிறுவனை கைது செய்துள்ளனர்.

(Picture: Triangle news)

வீட்டை சோதித்து பார்த்த போது வீட்டில் துப்பாக்கி இருப்பதைக் கண்டுள்ளனர். அதன் பின் அதை சோதித்து பார்த்த போது, பொம்மை துப்பாக்கி என்பதை அறிந்து சிறுவனை விடுவித்துள்ளனர்.

இது குறித்து சிறுவனின் தாயார் Mina Agyepong(42) கூறுகையில், தனது மகன் வீட்டின் கதவை திறந்தவுடன் கைது செய்யப்பட்டதாகவும், சுமார் 10 பொலிஸ் அதிகாரிகள் என்னையும், வீட்டில் இருந்த மகள்களை நோக்கி துப்பாக்கிகளை இலக்காகவும் வைத்திருந்தனர்.

MINA AGYEPONG

அப்போது அவர்கள் கைகளை உயர்த்தும் படி கூறினர். என் மகள்களின் தலையில் பொலிசார் துப்பாக்கியால் குறி வைக்கும் சிவப்பு புள்ளிகள் இருந்ததைக் கண்டேன். மிகவும் பயப்பட ஆரம்பித்தேன்.

இருப்பினும் நேர்மையாக இருந்தால் பொலிசார் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று நம்பினேன். அதன் பின் வீட்டை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது பொம்பை வகை BB துப்பாக்கி இருப்பதைக் கண்டனர்.

அது பார்ப்பதற்கு அப்படியே ஒரிஜினல் துப்பாக்கி போன்று இருக்கும் என்பதால், பொலிசார் அதை சோதனை செய்து பார்த்தாகக் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், சமீபத்திய மாதங்களில் லண்டனில் பல துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன.

இதில் பலர் காயமடைந்துள்ளனர். பொது மக்கள் எதிர்பார்ப்பது போல், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக துப்பாக்கி பற்றி வரும் ஒவ்வொரு தகவல்களையும் தீவிரமாக எடுத்து கொள்வோம்.

இது குறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தது சரியானது தான், இதே போன்று ஆயுதங்களை கண்டால் மற்றவர்களும் இதே போல் தகவல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்