திடீரென புதிய கொரோனா பயண விதியை அமல்படுத்திய பிரித்தானியாவுக்கு குவியும் எதிர்ப்பு

Report Print Basu in பிரித்தானியா
950Shares

ஸ்பெயினிலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் இப்போது புதிய கொரோனா வைரஸ் பயண விதிகளின் கீழ் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

ஸ்பெயினில் தொற்றுநோய்கள் அதிகரித்த பின்னர் சனிக்கிழமையன்று பிரித்தானியா இந்த விதியை அறிவித்து அமல்படுத்தியது.

இந்நிலையில், பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் நிழல் சுகாதார செயலாளர் ஜொனாதன் ஆஷ்வொர்த், அரசாங்கம் ஏன் இந்த முடிவை எடுத்தது என்பது எனக்கு புரிகிறது, ஆனால் அதைக் கையாளுதல் மற்றும் தொடர்புகொள்வதை உண்மையில் குழப்பமாக மற்றும் மோசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

குழப்பமான மற்றும் துன்பத்தில் உள்ள பிரித்தானியா சுற்றுலா பயணிகளுக்கு இந்த விதியை தெளிவுபடுத்துமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார், இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்த அவர்களின் முதலாளிகள் அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

முதலாளிகள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம் என்று அரசாங்கம் தரப்பில் கூறுகிறார்கள். சரி, ஆனால் அது கண்டிப்பாக நடக்கப்போகிறது என்று அர்த்தமல்ல.

மேலும் ஸ்பெயினிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்படும் பிரித்தானியர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், இதனால் சுயமாக தனிமைப்படுத்த வேண்டியவர்கள் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க தனிமைப்படுத்த முடியும் என்றும் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்