பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் புகுந்து NHS ஊழியரை கத்தியால் தாக்கிய இளைஞரின் புகைப்படம் வெளியானது

Report Print Arbin Arbin in பிரித்தானியா
671Shares

பிரித்தானியாவில் நேற்று பகல் மருத்துவமனைக்குள் புகுந்து NHS ஊழியரை கத்தியால் தாக்கியவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிவருபவர் என்ற தகவலுடன் அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளது.

பிரைட்டனில் உள்ள ராயல் சசெக்ஸ் கவுண்டி மருத்துவமனையில் உணவு தயாரிக்கும் பிரிவில் பணியாற்றும் ஊழியர் 56 வயதான ஜோசப் ஜார்ஜ் என்பவர் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் 30 வயதான கோனோலி மெலன் என்பவர் ஆயுதம் ஏந்திய பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

தற்போது அவரது புகைப்படம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நேற்று தாக்குதல் சம்பவத்தின் போது, மெலன் கத்தி முனையில் ஜார்ஜை மிரட்டி, போதைக்கு பயன்படுத்தும் மருந்துகள் பாதுகாக்கப்பட்ட அறையை தமது பாதுகாப்பு அடையாள அட்டையை பயன்படுத்தி திறக்க கட்டாயப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

ஆனால், அந்த அறைக்கு செல்லும் அனுமதி தமக்கு இல்லை என கெஞ்சிய ஜார்ஜை மெலன் ஐந்து முறை கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு மாயமாகியுள்ளார்.

ஆனால் துரிதமாக செயல்பட்ட பிரித்தானிய பொலிசார், ஒரு மணி நேரத்திற்குள், அந்த தாக்குதல்தாரியை கைது செய்தனர்.

கை, உதடு, தொண்டை மற்றும் உடற்பகுதியில் ஏற்பட்ட காயங்களுக்கு ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தாக்குதல்தாரியின் பின்னணி:

மருத்துவமனை ஊழியரை தாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ள கோனோலி மெலன் இசை தொடர்பான நிகழ்ச்சிகளை முன்னெடுக்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மட்டுமின்றி பல இசைக்கலைஞர்களுக்காகவும் இவர் பணியாற்றியுள்ளார். இன்று பகல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்ட மெலன் ஆகஸ்டு 17 வரை காவலில் இருப்பார் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்