கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி... இது சாதகமான செய்தி! பிரித்தானிய பிரதமர் போரிஸின் முக்கிய பதிவு

Report Print Santhan in பிரித்தானியா
4636Shares

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முதல் 2 கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஒரு சாதகமான செய்தி என்று நாட்டின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் சுமார் 140 நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு வகையான சோதனைக் கட்டங்களில் அவை எல்லாம் உள்ளன.

இதில், பிரித்தானியாவின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்து வரும் கொரோனா தடுப்பூசி, பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி விட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி இன்று இரவு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஏனெனில், Lancet என்ற பிரபல மருத்துவத்துறை இதழின், ஆசிரியர் ரிச்சர்ட் ஹோர்டன், கொரோனா தடுப்பூசி தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட தகவல் தான் காரணம்.

அதில், அவர் நாளை. தடுப்பூசி, என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் எந்த தடுப்பூசியை சொல்கிறார்? யார் தயாரிக்கும் தடுப்பூசியை சொல்கிறார்? என்ற விவரத்தை கூறாவிட்டாலும், அது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி என உலகம் முழுவதும் பேச்சு அடிபடத் தொடங்கியது.

இந்நிலையில், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் நன்கு பொருந்திப்போகக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது என ரிச்சர்ட் ஹார்டன் இன்று டுவீட் செய்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசியின் 1 மற்றும் 2வது கட்ட சோதனை முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, நன்கு பொறுத்துக் கொள்ளக்கூடியது (well-tolerated) மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. சகாக்களுக்கு வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 1077 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு பலன் கிடைத்துள்ளது. இவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தியை அறிந்தவுடன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இது மிகவும் சாதகமான செய்தி. புத்திசாலித்தனமான, உலக முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது மிகவும் ஒரு நல்ல விஷயம்

மேலும் சோதனைகள் தேவைப்படும், இது சரியான திசையில் ஒரு முக்கியமான படியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்