தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை பின் தொடர்ந்த நபர்... பின்னர் நடந்த சம்பவம்: கமெராவில் சிக்கிய காட்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
726Shares

பிரித்தானியாவில் தனியாக நடந்து சென்ற இளம்பெண் ஒருவரை ஒரு மர்ம நபர் பின்தொடரும் காட்சிகள் CCTV கமெராவில் சிக்கியுள்ளன.

Lancashireஇல் ஒருவர் அந்த இளம்பெண்ணை தொடந்து வந்திருக்கிறார்.

பயந்து நடுங்கிப்போன அந்த இளம்பெண், சமயோகிதமாக செயல்பட்டு தனது உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

அந்த வீட்டில் கதவைத் தட்டிவிட்டு அவர் நிற்கும் நிலையிலும் அந்த நபர் விடாமல், அந்த வீட்டின் முன்னாலேயே அங்கும் இங்கும் நடப்பதை அந்த வீட்டில் பொருத்தியுள்ள கமெராவில் சிக்கிய காட்சியில் காண முடிகிறது.

இதேபோல் ஒருவர் பலரை பின்தொடர்வது குறித்து ஏற்கனவே அறிந்திருந்த அந்த வீட்டின் உரிமையாளரான Ms Wilson, அந்த காட்சிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த காட்சிகள் இணையத்தில் 55,000 முறை பார்க்கப்பட்டுள்ளன. பொலிசாருக்கு இந்த சம்பவம் தொடர்பாக புகாரளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்