ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி ஒன்று பாதுகாதுகாப்பானதா, அது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குமா என்பது தொடர்பான முடிவுகள் இன்று வரவிருக்கின்றன.
ஆனால், தடுப்பூசி தயாரானாலும் நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டோம் என்று ஒரு கூட்டம் பிரித்தானியர்கள் அடம்பிடிப்பதாக அதிர்ச்சி தரும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் வாழும் 14 சதவிகிதம்பேர், தடுப்பூசி போட்டுக்கொள்ள தங்களுக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியர்களில் கால்வாசிப்பேருக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இது சுயநலமான முடிவு என்கிறார் பேராசிரியர் Paul Hunter என்பவர். ஒரு மருத்துவராக, தடுப்பூசி போடாமல் இறந்துபோன பல குழந்தைகளை எனக்குத் தெரியும், தடுப்பூசி போட்டிருந்தால் அவர்கள் இறந்திருக்கமாட்டார்கள்.

அதேபோலவே, இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்களால் அவர்களது தாத்தா பாட்டி போன்றவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்கிறார் Hunter.
இணையத்தில் ஏராளம் போலியான தகவல்கள் தடுப்பூசி குறித்து உலாவுகின்றன என்று கூறும் maliciously, தடுப்பூசியால் ஏற்படும் பிரச்சினைகள் மோசமான வகையில் பெரிதுபடுத்தப்பட்டுள்ளன என்கிறார்.