லண்டனில் உயரமான கட்டிடத்தில் இருந்து மின்னல் வேகத்தில் கீழே விழுந்த நபர் உயிரிழப்பு! சம்பவ இடத்தின் வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா
341Shares

லண்டனில் உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து கீழே விழுந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Elephant and Castleல் தான் தான் இந்த சம்பவம் நேற்று இரவு 8.20 மணிக்கு நடந்துள்ளது.

இது தொடர்பாக பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்த நபர் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பெரும் உயரத்தில் இருந்து மின்னல் வேகத்தில் சாலையில் உள்ள நடைபாதையில் வந்து விழுந்துள்ளார்.

கீழே விழுந்த பின்னர் லண்டன் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு உடனடியாக வந்து அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

இறந்த நபரின் அடையாளத்தைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது, அதன் முடிவுக்கு பின்னரே இது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்