பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு... இந்த விதியை பின்பற்ற தவறினால் பொலிசாருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம்!

Report Print Santhan in பிரித்தானியா
793Shares

பிரித்தானியாவில் கடைகளில் முகக்கவசம் அணிவது அடுத்த வாரம் முதல் கட்டாயம் என்பதால் இது குறித்து சுகாதார செயலாளர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த 15-ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்துகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வரும் 24-ஆம் திகதி முதல், கடைகளுக்கு ஷாப்பிங் செல்வோர் முகக்கசவம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து சுகாதார செயலாளர் Matt Hancock, ஜூலை 24 முதல் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்குள் முகக் கவசம் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்தினார்.

சமீபத்திய வாரங்களில் சில்லறை விற்பனைகளை திறந்துவிட்டோம். இதனால்கடைக்காரர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

கடைகளுக்குச் செல்லும் பொது நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

வழிகாட்டுதலைப் பின்பற்றாத எவருக்கும் 100 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம். 11 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சில குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இந்த விஷயத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

(Picture: Reuters)

அதே நேரத்தில் முகக்கவசம் அணிய வேண்டிய பொறுப்பு தனிநபரிடம் உள்ளது. ஒரு தேசமாக, இந்த வைரஸைப் பெறுவதில் வைரஸால் நாம் இழப்பை சந்தித்துள்ளோம். இது பலருக்கு வருத்தத்தை அளித்துள்ளது. தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது.

இருப்பினும் இந்த கோடைகாலத்தில் இந்த வைரஸிடம் இருந்து மக்களை காக்க அனைத்தும் செய்யப்படலாம்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிய மறுத்தால் கடை ஊழியர்கள் காவல்துறையை அழைக்க வேண்டும்.

(Picture: Reuters)

முகக்கவசம் அணியக்கூடாது என்பதற்கு சரியான காரணம் இல்லாதவர்களை கடைகளில் இருந்து வெளியேற்ற வேண்டும்

பொலிசாருக்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அபராதம் விதிக்க முடியும் என்று கூறியுள்ளார். இதனால் கடைக்கு செல்லும் போது மக்கள் நிச்சயமாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், இல்லையென்றால் அபராதம் உறுதி என்பது தெரிவதால், மக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்