மகாராணியார் மற்றும் ஐந்து பிரித்தானிய பிரதமர்களுடனும் புகைப்படங்களில் காணப்படும் ஒரு சீன நாட்டவர்... வெளியாகும் தகவல்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
306Shares

சீன நாட்டவர் ஒருவர் பிரித்தானிய மகாராணியார், ஐந்து பிரித்தானிய பிரதமர்கள், இளவரசர்கள் வில்லியம், ஹரி என ஒருவர் விடாமல் ராஜ குடும்ப மற்றும் பிரித்தானிய அரசியல் பிரமுகர்களுடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Zhirong Hu என்னும் அந்த சீன நாட்டவர், பிரித்தானியாவின் அத்தனை பிரபலங்களுடனும் புகைப்படங்களில் போஸ் கொடுத்து நிற்பதைக் காணமுடிகிறது.

எப்படி அவர் மகாராணியாருடனும், இளவரசர்களுடனும் நிற்க அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், முன்னாள் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான Sir Iain Duncan Smith, பாதுகாப்பு குழுக்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பவேண்டும் என்று கூறியுள்ளார்.

இத்தகைய நபர்கள், சீன அரசின் திட்டம் ஒன்றின்படி ராஜ குடும்பத்தினரின் உறுப்பினர்கள் முதலான முக்கியஸ்தர்களிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கம் கொண்டவர்கள் என்பது குறித்து பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் ஏன் ராஜ குடும்பத்தினருக்கு ஆலோசனை கூறவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.

இந்நிலையில், Zhirong Hu சீனாவால் கட்டுப்படுத்தப்படும் ஒரு குழுவின் இயக்குநர் என்பதும், வெளிநாட்டு பிரபலங்களுடன் பழகி தங்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்திக்கொள்வது அந்த குழுவின் இலக்கு என்பதும் தெரியவந்துள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியைச் சார்ந்த ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் ராஜ குடும்பத்தினரை அவர் தொடர்பு கொண்டுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்