மனைவியை கொல்வது எப்படி... இணையத்தில் தேடிய நபர்: பரிதாபமாக பலியான இந்திய வம்சாவளி இளம்பெண்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
3926Shares

மனைவியை கொல்வது எப்படி? என் மனைவியை கொல்ல ஒரு கூட்டாளியை சேர்த்துக்கொள்ளலாமா? பிரித்தானியாவில் கூலிக்கு கொலை செய்பவர்களை எங்கே கண்டுபிடிப்பது?இவையெல்லாம் ஒருவர் இணையத்தில் தேடிய விடயங்கள்...

கடைசியில் அவைதான் கொலை வழக்கு ஒன்றில் முக்கிய சாட்சியங்களாக அமைந்தன. Middlesbroughவில் வாழ்ந்து வந்த பார்மசிஸ்டான ஜெசிகா பட்டேல் (34), ஒரு நாள் தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தன் மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்தார் ஜெசிகாவின் கணவர் மித்தேஷ்.

ஆனால், அது ஒரு நாடகம் என்றும் அவர்தான் ஜெசிகாவை பிளாஸ்டிக் கவர் ஒன்றால் கழுத்தை நெறித்துக்கொன்றார் என்பதும் அவரது ஐபோனை ஆராய்ந்தபோது தெரியவந்தது.

அதிக மருந்தைக் கொடுத்து கொல்வது முதல் ஆளை வைத்து கொல்வது வரை நீண்ட காலமாகவே மனைவியை கொல்ல திட்டமிட்டிருந்திருக்கிறார் மித்தேஷ். காரணம், மித்தேஷ் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்...

ஜெசிகாவை கொன்றுவிட்டு, அவரது இன்சூரன்ஸ் பணத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தனது ஓரினச் சேர்க்கை காதலனுடன் வாழ்க்கையை தொடங்குவதுதான் மித்தேஷின் திட்டம்.

ஆனால், விதி வேறு திட்டம் போட, 30 ஆண்டுகளுக்கு சிறையிலிருந்து வர முடியாத வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது மித்தேஷுக்கு.

தற்போது, ஜெசிகா கொலை தொடர்பாக பல ஏஜன்சிகள் இணைந்து மீளாய்வு ஒன்றை நடத்தின. மகளை இழந்த வேதனையின் மத்தியிலும், இனி இப்படிப்பட்ட குடும்ப வன்முறைக் கொலைகள் நடக்கக்கூடாது என்பதற்காக மீளாய்வில் பங்கேற்றனர் ஜெசிகாவின் பெற்றோரும் குடும்பத்தினரும்.

தயவு செய்து குடும்பங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள், பிள்ளைகள் நன்றாக இருக்கிறார்கள் என நீங்களாக முடிவு செய்துவிடாதீர்கள் என்கிறார்கள் ஜெசிகாவின் பெற்றோர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்