வாயில் தங்கப்பல் கட்டியிருப்பார்! லண்டனில் 3 பெண்களிடம் அத்துமீறி தவறாக நடந்து கொண்ட இளைஞன் குறித்து முக்கிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா
173Shares

லண்டனில் பேருந்து மற்றும் பொது இடத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞனின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

Stamford Hillல் கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி பேருந்தில் அப்துல் யூசுப் (31) என்பவர் பயணித்துள்ளார்.

அப்போது உடன் பயணித்த இரண்டு பெண்களிடம் அத்துமீறலில் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 4ஆம் திகதி பெண் ஒருவரை வன்கொடுமை செய்யவும் அவர் முயன்றுள்ளார்.

இந்நிலையில் பொலிசார் அப்துல் யூசுப் தொடர்பில் அவர் புகைப்படத்தை வெளியிட்டு அதோடு எச்சரிக்கை தகவலையும் வெளியிட்டுள்ளனர்.

அதில், 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட யூசுப் வாயில் தங்கப்பல் பொருத்தியிருப்பார் என கூறப்பட்டுள்ளது.

மேலும் யூசுப்பை யாராவது பார்த்தால் அவரை அணுக வேண்டாம், அதற்கு பதிலாக 999 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்